நேபாளத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி!

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples Nepal Flood
By Dhilak Aug 27, 2026 05:37 PM GMT
Report

நேபாளத்தைத் தாக்கிய திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த நிதியுதவி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அந்நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரணத்தையும் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தை! ட்ரம்ப்பை மையப்படுத்தி வெள்ளை மாளிகை அறிக்கை

நீண்டகால நட்புறவு

வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் மக்கள் சந்தித்த இன்னல்கள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

நேபாளத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி! | Sri Lanka Donates One Million Dollars Aid To Nepal

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள்

இதற்கிடையில், இன்று காலை நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கானலுடன் தொலைபேசி உரையாடலில் வெளியுறவு அமைச்சர் விஜய ஹேரத் இலங்கையின் இரங்கலையும், ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நேபாளத்திற்கு இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி! | Sri Lanka Donates One Million Dollars Aid To Nepal

இதன்படி, நேபாளத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக, எதிர்காலத்தில் இலங்கையால் வழங்கக் கூடிய பிற பொருத்தமான ஒத்துழைப்பு வழிமுறைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

ஈரான் மீது அமெரிக்காவின் "Economic D-Day" தாக்குதல்!

UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்

UK-வின் 3 விமான நிலையங்களில் சைபர் தாக்குதல்! 8.7 மில்லியன் தரவுகள் அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! '
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026