மண்முனை தென் எருவில் பற்றில் ஆரம்பமாகிய இலங்கை கல்வி வரலாற்றின் முதல் திட்டம்
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை துறைநீலாவணையில் ஆரம்பிக்கப்பட்ட இலவச ஆங்கில பாலர் பாடசாலை திட்டமானது பாராட்டுக்களை பெற்று வருகிறது. '
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் திட்ட முன்மொழிவுக்கமைய, சபையின் அனுமதியுடன் அதி நவீன வசதிகளுடன் ஆங்கில பாலர் பாடசாலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் திறக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற சிறுவர்கள் ஆரம்ப வயதிலேயே தரமான ஆங்கிலக் கல்வியை இலவசமாக பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் திறன் மேம்பாட்டிற்கும் இது முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை இலங்கை முழுதும் திரும்பிபார்க்கவைத்த திட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்