இந்திய மீனவர்களுக்கு ஒரு நீதி இலங்கை மீனவர்களுக்கு மற்றொரு நீதியா? ஆதங்கத்தில் உறவுகள்!

By Kalaimathy Apr 16, 2021 05:27 AM GMT
Report

இந்திய கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி வருகை தந்ததாக கடந்த மாதம் பத்தாம் திகதி மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த ரவீந்திரன் அருண் குரூஸ், வெலிசோர் றேகன் பாய்வா ஆகிய இரு மீனவர்களுமே இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட மீனவர்களின் உறவினர்கள், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் ஊடாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் டினேஸ் குணவர்தனவிற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். சமந்தப்பட்ட மீனவர்கள் இருவரும் கடந்த 10 ஆம் திகதி காலை 5.00 மணியளவில் வழமை போன்று மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சீரற்ற கால நிலைகாரணமாக இந்திய கடல் பகுதிக்குள் சென்றதாகவும் தற்போது அவர்கள் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சிறையில் மிகவும் கஸ்ரப்படுவதாகவும் அங்குள்ள சட்டத்தரணி ஒருவர் மூலமாகவே தற்போது தாங்கள் அவர்களை தொடர்பு கொள்வதாகவும் சட்டத்தரணி ஊடாக ஜாமின் கோரிய போதும் ஜாமின் வழங்கப்படவில்லை என கைது செய்யப்பட்ட மீனவர் ஒருவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

அதே நேரம் கொரோனா காரணமாக தொடர்சியாக கஸ்ரத்தில் உள்ளபோது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதால் ஒன்றரை மாத கைக்குழந்தை உட்பட மூன்று குழந்தைகளுடன் மிகவும் கஸ்ரத்தில் வாழ்வதாகவும் இலங்கை எல்லையில் இந்திய மீனவர்கள் ரோலர் படகில் மீன்பிடி நடவடிகையில் ஈடுபடும் போது கைது செய்யப்பட்டால் இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்வதாகவும் ஆனால் இந்தியாவில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மீனவர்களோ அவர்களின் ஆதனக்களோ உடனடியாக இந்திய அரசாங்கத்தினால் விடுவிக்கபடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். எனவே தற்போது குறித்த விடயம் தொடர்பாக மீன்பிடித்துறை அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும், எனவே அமைச்சர் மற்றும் இலங்கை இந்திய தூதரகங்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் இருக்கும் தனது கணவனை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மீனவர்கள் கைது செய்யப்படமை தொடர்பாக பேசாலை பொலிஸ் நிலையம் மற்றும் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் பாதிக்கப்படவரின் குடும்பத்தினரால் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023