உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் (15) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக உயர்வை நோக்கிச் சென்ற ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்று 5,020 டொலராகக் குறைந்துள்ள நிலையில் இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க சரிவாகும்.
வெள்ளியின் விலை வீழ்ச்சி
அதேபோன்று வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும், ஒரு அவுண்ஸ் வெள்ளி 80.61 டொலராக விற்பனை செய்யப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளமை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற போர்ச் சூழலால் முதலீட்டாளர்கள் தமது முதலீட்டு உத்திகளை மாற்றி அமைத்துள்ளமை இந்தப் பாதிப்பிற்கு முக்கிய காரணங்கள் சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |