அரசின் கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிராக திரளும் தமிழ் கட்சிகள்!
அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகளினால் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது.
தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து கிவுல் ஓயா திட்டமானது அரசாங்கத்தின் மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீட்டோடு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா வடக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது அமைப்புகளுக்கும் அழைப்பு
அதன்படி, பொது அமைப்புகள் உடனான கலந்துரையாடல் ஒன்றினை தமிழ் கட்சிகள் 26 ஆம் திகதி தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக வவுனியாவை சேர்ந்த பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கிவுல்ஓயா திட்டம் தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்து கிளம்பியுள்ள நிலையில் அரசாங்கம் தொடர்ந்தும் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |