திருகோணமலையில் பல ஆயுதங்கள் மீட்பு!
திருகோணமலை - ஈச்சிலம்பற்று காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகரை விசேட அதிரடிப்படையினரால் அந்த பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து இன்று (02.04.2026) குறித்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது 04 மோட்டார் குண்டுகள் , 2 மோட்டார் குண்டு மின்னேற்றி மற்றும் ரி - 56 ரக துப்பாக்கியின் 75 தோட்டாக்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் மீட்கப்பட்டன
இது குறித்து மேலும் தெரியவருகையில், வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்கள் ஈச்சசிலம்பற்று காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாகரை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்