அணிக்கு திரும்பும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் - மகிழ்ச்சியில் மும்மை இந்தியன்ஸ்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் துடுப்பாட்ட போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து துடுப்பாட்ட அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் துடுப்பாட்ட போட்டித் தொடரில் விளையாடவுள்ளது.
இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
முழு உடற்தகுதி
Look who's back ?
— ICC (@ICC) December 22, 2022
ICYMI: England have named a strong side for their upcoming CWCSL assignment against South Africa.
Details ? https://t.co/CEMVYR8zNI pic.twitter.com/dUmuUwKAF4
இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
தற்போது முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பி உள்ளார். இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் துடுப்பாட்ட போட்டி ஜனவரி 27-ம் திகதி புளூம்ஃபோன்டைன் நகரில் நடைபெறவுள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்ச்சரை எடுத்திருந்தது. ஆனால் காயம் காரணமாக 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
மும்மை இந்தியன்ஸ்
JOF ? in ??????? colours ???
— Mumbai Indians (@mipaltan) December 22, 2022
Words that make us go: ??#OneFamily @JofraArcher @ICC pic.twitter.com/Bk5uFNaCME
அது மட்டுமில்லாமல் கடந்த இரு டி20 உலக கோப்பை தொடர்களிலும் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஆர்ச்சர் அடுத்த ஆண்டு நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணியில் இடம் பிடித்ததை மும்மை இந்தியன்ஸ் அணி தனது டுவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மும்பை அணி டுவிட்டர் பதிவில், மீண்டும் இங்கிலாந்து அணியில் "ஜோப்" என தங்களது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளனர்.