இஸ்ரேலில் யேமன் நடத்திய அதிரடி ட்ரோன் தாக்குதல்: 20 பேர் படுகாயம்
இஸ்ரேல் (Israel) மீது யேமன் (Yemen) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாதுகாப்புப் படையினர்
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து எயிலாட் நகரத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சிப்படையினர்
இருப்பினும், அந்த ட்ரோன்களை தகர்க்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்புகள் நடத்திய பதில் தாக்குதல்களில் மக்கள் படுகாயமடைந்திருக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் மீது தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் போரில், பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் தாக்குதல் நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
