தொடரும் பதற்றம் - எல்லையில் மிகப்பெரிய ஊடுருவலை நடத்திய சீனா - சாரை சாரையாக நுழைந்த போர் விமானங்கள்!
தாய்வான் வான் பாதுகாப்பு எல்லைக்குள் கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் சீனா சுமார் 71க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி இருப்பதாக தாய்வான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய சில தினங்களிலேயே, சீனா தாய்வான் இடையிலான பதற்றம் அதிகரிக்க தொடங்கியது. ஜனநாயக தாய்வான், சீனாவுக்கு திரும்ப வேண்டும் என்று சீன அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எதிர்க்கப்படும் "இரண்டு அரசாங்கம் ஒரே நாடு"
ஆனால் அதற்கு தாய்வான் மறுப்பு தெரிவிப்பதுடன், தங்கள் தீவு நாடு சுதந்திரமானது என்றும், "இரண்டு அரசாங்கம் ஒரே நாடு" என்ற திட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாகவும் அறிவித்தது.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக தாய்வான் பாதுகாப்பு எல்லைக்குள் சீனா தொடர்ந்து விமானங்கள் அல்லது கப்பல்களை அனுப்பி தீவு நாட்டை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உட்பட 70 க்கும் மேற்பட்ட சீன விமானங்கள் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தன.
அவற்றில் 43 தாய்வான் ஜலசந்தியின் இடைநிலைக் கோட்டைக் கடந்ததாக தாய்வான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் தாய்வான் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் சீனா தனது மிகப்பெரிய ஊடுருவலைத் தொடங்கியுள்ளதாகவும் தாய்வான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அங்கீகரிக்காத சீனா
மேலும் தாய்வானுக்கு மிக அருகே 7 சீன கடற்படை கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சீன விமானங்களை தடுக்க போர் விமானங்களை அனுப்பியதாகவும், ஏவுகணை அமைப்புகள் நிலைமையை கண்காணித்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்வான் கூறும் இந்த இடைநிலைக் கோடானது, இரு தரப்பினருக்கும் இடையே உள்ள அதிகாரபூர்வமற்ற எல்லை பகுதியாகும், ஆனால் இதனை சீனா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
இந்த இராணுவ நடவடிக்கையானது தற்போதைய அமெரிக்க-தாய்வான் இராணுவ விரிவாக்கம் மற்றும் சீனாவுக்கு எதிரான ஆத்திரமூட்டலுக்கு உறுதியான பதில் என்று சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஷி யி தெரிவித்தார்.
சீனாவிற்கு எதிரான சவால்
மேலும் தாய்வானுடன் கூடுதல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அங்கீகரித்த அமெரிக்க பாதுகாப்புச் செலவு மசோதா, சீனாவுக்கு எதிரான ஒரு மூலோபாய சவால் என்றும் ஷி தெரிவித்தார்.
இதற்கிடையில் தாய்வான் அதிபர் சாய் இங்-வென் இன்று காலை இராணுவ அதிகாரிகளிடம் பேசும்போது, சீனாவை குறிப்பிடாமல் "எதேச்சாதிகாரத்தின் தொடர்ச்சியான விரிவாக்கம்" காரணமாக தாய்வானின் பாதுகாப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
