விமானத் தபாலில் போதைப்பொருள் கடத்தல் - சுங்க அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lanka Airport
United States of America
By Dharu
அமெரிக்காவில் இருந்து விமானத் தபாலில் கவனமாக பொதி செய்யப்பட்டு அனுப்பப்பட்ட பொம்மை பார்லர் பொதிக்குள் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பொதியை பெற்றுக்கொள்ள வந்த நபரே கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகள், சுங்க மற்றும் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பொதியில் 1 கிலோ 367 கிராம் குஷ் போதைப்பொருள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமையக முகாமின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்