நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்: இடமாற்றப்பட்ட பெண் கைதிகள்

Crime Prisons in Sri Lanka Prison
By Thulsi Jul 09, 2026 03:54 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலரும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று சிறைச்சாலைக்குள் குழப்பமாக நடந்துகொண்ட பெண் கைதிகள் குழுவொன்று, வாரியபொல சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறை கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட கைதிகள் - இந்தியர் ஒருவரும் பலி

சிறை கலவரத்தில் அடித்துக் கொல்லப்பட்ட கைதிகள் - இந்தியர் ஒருவரும் பலி

பதற்றமான சூழ்நிலை

தற்போதைய நிலவரப்படி, சுமார் 700க்கும் மேற்பட்ட கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடரும் பதற்றம்: இடமாற்றப்பட்ட பெண் கைதிகள் | Female Prisoners At Negombo Prison Transferred

சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, கைதிகள் சிலர் தமது சிறை அறைகளிலிருந்து வெளியே வந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் தலையிட்டு அவர்களை மீண்டும் சிறை அறைகளுக்குள் அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தின் போதே பெண் கைதிகள் சிலர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, கைதிகளின் உறவினர்கள் நேற்று சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று கூடியிருந்தனர். அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு சிறைச்சாலை அதிகாரிகளும் காவல்துறையினரும் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் இரவில் பதற்றம்...! இளைஞர்களை காவல்துறையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் இரவில் பதற்றம்...! இளைஞர்களை காவல்துறையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு

நீர்கொழும்பு சிறை மோதலைக் கட்டுப்படுத்த STF நுழைந்ததில் தாமதம்...! வெளியான காரணம்

நீர்கொழும்பு சிறை மோதலைக் கட்டுப்படுத்த STF நுழைந்ததில் தாமதம்...! வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026