இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் அமெரிக்க டொலரின் வலுவூட்டல் ஆகியன இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இலங்கையிலும் இன்றைய நாளில் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,075 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
[XRVQ5L5]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 50 நிமிடங்கள் முன்