தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வு! (படங்கள்)
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களைப் போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஷ்ட்டிக்கப்படவுள்ளது.
நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஷ்ட்டிக்கப்படுவது வழமை,
மாவீரர் வாரம்
அந்தவகையில் இவ்வாண்டும் (2023) மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெல்லாம் தயாராகி வருகிறது.
நவம்பர் மாதம் 21 ம் திகதி முதல் 27 ம் திகதி வரையான காலப்பகுதி மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது, அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (21) உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான (2023) மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று (21) உணர்வு பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது
இந்த நிகழ்வின் போது உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் செலுத்தி மாவீரர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |