உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு கோரி யாழில் தொடரும் போராட்டம்!
யாழ்ப்பாணம் - வலிகாமம், வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போராட்டம் நடைபெறும் நிலையில் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்று (19) அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலி. வடக்கு பலாலியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
காணி உரிமையாளர்கள்
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

தமது 650 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர்.
அதற்கமைய இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |