படுகொலைகள் தொடர்பில் விசாரணை வலையில் சிக்கவுள்ள புலனாய்வு அதிகாரிகள்
கடந்த காலங்களில் இராணுவதிற்கு எதிராக குற்றமிழைத்தவர்களுக்கு அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் வேட்டையாடுகிறது என எதிர்தரப்புக்களால் எழுந்துள்ள கண்டனங்களுக்கு எதிராக குறித்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அநுர தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளதன்படி, சட்டத்தை சரியாக செயற்படுத்தும் போது இராணுவ பழிவாங்கள் என்று கோசம் எழுப்ப வேண்டாம்.
உண்மையை கண்டறிய வேண்டும்
நாட்டின் நல்லிணக்கம் உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த பின்னணியின் உண்மையை கண்டறிய வேண்டும். குற்றங்களுக்கு தண்டனை வழங்குவதை தவிர்க்க முடியாது.

உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் போது கடந்த காலங்களில் குறிப்பிட்டதை போன்று இராணுவத்தினரை வேட்டையாடுதல் என்ற எதிர்ப்பு தோற்றம் பெறும்.
11 மாணவர்களை கடத்திச் சென்ற விவகாரத்தில் கடற்படையின் உயர் அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததற்கும், மாணவர்களை கடத்தி காணாமலாக்கியதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என அறியப்பட்டுள்ளது.
கடற்படையின் கௌரவத்தை பாதுகாக்க இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மை வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
கடற்படை மீது உண்மையாக பற்றுக் கொண்டுள்ளவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை. இதனை இராணுவ பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம். கடந்த கால படுகொலைகள் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதா அல்லது அதே குற்றங்களுடன் இருப்பதா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் இவற்றை மறைப்பதால் சர்வதேசம் அறியாமல் இருக்காது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய படுகொலைகள் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
விடுதலை புலிகளுக்கு தொடர் அழுத்தத்தை விடுத்த ரணசிங்க பிரேமதாச: இந்தியா தொடர்பில் அவிழும் முடிச்சுகள்...!
படுகொலை குறித்த விசாரணை
லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்து முறையான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நகர்வுகள் உண்மையில் பாதுகாப்பு பிரிவை முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும். தாஜூதீனின் படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய அதிகாரிகள் விசாரிக்கப்படவுள்ளார்கள். இது படுகொலை என்பதை விசாரணை அதிகாரிகள் அண்மையில் எனக்கு உறுதிப்படுத்தினார்கள்.
இதற்கு நீதியை பெற்றுக்கொடுக்க கூடாதா, குற்றவாளிகளை தண்டிக்கும் போது இராணுவ பழிவாங்கல் என்று குறிப்பிடாதீர்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பற்றியும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
விசாரணைகளை மேற்கொள்ளும் போது நீதிமன்றத்தை நாடாமல் ஏன் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கின்றீர்கள். குண்டுத்தாக்குதல்கள் குறித்து பல கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.
நீதி கோரிக்கை
இன்று நீதியை கோருகின்றவர்கள் அன்று எதனையும் செய்யவில்லை. 2019 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தின் பின்னர் பல சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருவருட காலத்தில் பல குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுப்பிடித்தோம். கடந்த கால குற்றங்கள் மற்றும் படுகொலைகள் இடம்பெற்றதன் பின்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.
அதன் பின்னர் சாட்சியங்கள் அழிக்கப்பட்டன. இதனால் தான் இன்றும் விசாரணைகள் தொடர்கின்றன.
ஆகவே முறையான சாட்சியங்களுடன் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். எவருக்கும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் நீதிமன்றத்துக்கு சென்று நீதியை பெற்றுக்கொள்ளலாம்” என அரசாங்க தரப்பு வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 19 மணி நேரம் முன்