கிளிநொச்சியில் குடும்பத்தை மோதித் தள்ளிய டிப்பர் : மகளை தொடர்ந்து தாயும் பலி

Kilinochchi Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jan 03, 2025 02:51 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) நகரில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற டிப்பர்  - மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் மகளை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாய் நேற்று (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த கஜன் யாழினி வயது 34 என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!

2025 ஆம் ஆண்டு நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!

விபத்து சம்பவம்

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இருந்து இரணைமடு நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமொன்று அதற்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்ததுடன் அவர்களில் 2 வயது குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியில் குடும்பத்தை மோதித் தள்ளிய டிப்பர் : மகளை தொடர்ந்து தாயும் பலி | Kilinochchi Tipper Accident Injured Mother Died

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார். பின்னர் அவர் பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 7 வயதான மற்றுமொரு சிறுமியும் அவரது தாய் மற்றும் தந்தையே காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 மேலதிக விசாரணை

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த  தாயார் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம்(02) உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

முட்டை விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்!

முட்டை விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள மாற்றம்!

என்னை பலிக்கடா ஆக்கி விட்டனர் - யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

என்னை பலிக்கடா ஆக்கி விட்டனர் - யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016