இலங்கை வந்த சுற்றுலா பயணிக்கு நேர்ந்த கதி
நுவரெலியாவிலிருந்து (Nuwara Eliya) நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு இரண்டு வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (20.02.2025) காலை 8 மணியளவில் ஹட்டன் (Hatton) - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பேருந்தை கவனக்குறைவாக முந்திச் செல்ல முற்பட்டபோது, முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து நடந்தபோது, முச்சக்கர வண்டி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் ஒன்றின் மீதும் மோதியுள்ளது.
இரண்டு வெளிநாட்டினரும் நுவரெலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையில், நானுஓயா தொடருந்து நிலையத்திலிருந்து எல்ல பகுதிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 17 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்