பார்வையிட வேண்டிய முதல் இடம் - உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு கிடைத்த பெருமை
2025 ஒக்டோபரில் உலகளாவிய ரீதியில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கை (Sri lanka) தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயம் உலகளாவிய பயண இதழான டைம் அவுட் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக டைம் அவுட் கூறியுள்ளது.
பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கை
தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது.
இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் நியூ மெக்ஸிகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இதில் அடங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
