சிறிலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த இரண்டு விமானங்கள்! வெளியாகியுள்ள அறிவிப்பு
நீண்ட நாட்களாக இயந்திர கோளாறு காரணமாக தரையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்கள் தற்போது மீண்டும் சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அத்தோடு, மற்றுமொரு விமானம் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் தங்கள் விமான அணியில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, நிறுவனம் Airbus A330-200 வகை அகல உடல் விமானத்தை (wide-body aircraft) வாடகை அடிப்படையில் பெற்றது.
விமான அட்டவணை
அதன் மூலமாக விமான சேவைகளை விரிவுபடுத்தவும், சர்வதேச இணைப்புகளை வலுப்படுத்தவும் நிறுவனத்துக்கு முடிந்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு முழுவதும், சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தனது பறக்கும் வழித்தடங்களை மறுபரிசீலனை செய்ததோடு, தேவை அடிப்படையிலான (demand-based) அட்டவணைகளை அறிமுகப்படுத்தியதுடன், டிஜிட்டல் விற்பனை தளங்களையும் மேம்படுத்தியிருந்தது.
இதேவேளை, வேகமாக வளரும் இந்திய சந்தையில் சிறப்பாக சேவையளிக்கும் நோக்கில், பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு செல்லும் விமான அட்டவணைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
