யாழில் வாகன விபத்து! தந்தை - மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி
யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம், நேற்று (21.04.2026) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள், ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பரமேஸ்வரன் மற்றும் அவரது 23 வயதுடைய மகன் கஜதீபன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மின் கம்பத்துடன் மோதி விபத்து
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்குச் சென்று விட்டு, இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், உரும்பிராய் சந்திப் பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |