அநுர அரசாங்கத்தால் மகிழ்ச்சியில் வடக்கு மக்கள் : ரில்வின் சில்வா பெருமிதம்!
வடக்கு மக்களின் கோரிக்கைகளுக்கும் வடக்கு மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்களின் கோரிக்கைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளதாக ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வடக்கு மக்கள் சந்தோஷமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யூடியூப் நேர்காணலொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கின் அபிவிருத்தி
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் முக்கியமாக வடக்கில் மைதானம் ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்டது. வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வசதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
வடக்கு மக்களின் கோரிக்கை
வடக்கு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நெறியாளர் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த ரில்வின் சில்வா,
“யாழ்ப்பாண மக்களின் கோரிக்கைகளுக்கும் யாழ் மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்களின் கோரிக்கைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
கடந்த அரசாங்கங்களின் போது அவர்களுடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனினும், தற்போதைய அரசாங்கத்தில் வடக்கு மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
