வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, அவர் பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடமிருந்து முன்னாள் ஜனாதிபதிக்கு சமீபத்தில் அழைப்புகள் விடுக்கப்பட்டன.
ஆயிரம் அரசியல் கூட்டங்கள்
இந்த நிலையில், குறித்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ள ரணில், வரும் காலத்தில் ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்தி பாரிய புரட்சியை ஏற்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், தனது உடல்நிலை மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் வெளிநாடொன்றுக்கு செல்லவுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், அந்த பயணம் தொடர்பில் குறிப்பிட்ட திகதிகள் ஏதும் அறிவிக்கப்படாத நிலையில், ஆண்டு இறுதிக்குள் அவர் வெளிநாடு செல்வார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
